தமிழக செய்திகள்

பதிவுத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட இலக்கு - அமைச்சர் மூர்த்தி தகவல்

தமிழகத்தில் 87 சதவீதம் வருவாய் வணிக வரி மற்றும் பதிவுத்துறை மூலமாக கிடைப்பதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மதுரை,

மதுரை ஒத்தக்கடையில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் சனிக்கிழமை தோறும் பத்திரப்பதிவு செய்யும் திட்டத்தினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், இந்த திட்டம் முதற்கட்டமாக தமிழகத்திலுள்ள 100 சார்பு பதிவு அலுவலகத்தில் தொடங்கப்படுகிறது என்றும் விரைவில் அனைத்து பத்திர பதிவு அலுவலர்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 87 சதவீதம் வருவாய் வணிக வரி மற்றும் பதிவுத்துறை மூலமாக கிடைக்கிறது என்று அவர் கூறினார். கடந்த ஒரு ஆண்டு காலத்தில் பதிவுத்துறையில் ரூ. 13 ஆயிரத்து 260 கோடி வருவாய் ஈட்டி உள்ளதாக தெரிவித்த அவர், ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு