ரூ.18 கோடியில் சாலை
திருப்பத்தூரில் இருந்து மட்றப்பள்ளி, புதூர்நாடு செல்லும் சாலையை அகலப்படுத்தி புதுபிக்கும் பணி வனத்துறை அனுமதியுடன், நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த சாலை 3 மீட்டர் அகலத்துடன் பல்வேறு இடங்களில் ஜல்லி சாலையாகவும், மழை காரணமாக சேதமுற்றும் இருந்தது. இதனால் மலைவாழ்மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
தற்போது 3.75 மீட்டர் அகலத்துடன் மழையால் பாதிக்காத வகையில் 1 மீட்டர் அகலம் கொண்ட சிமெண்டு தளத்துடன் சாலை அமைக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் மழை நீரை சேகரித்து வெளியேற்றும் வகையில் ஆங்காங்கே மழைநீர் குழிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 700 மிட்டர் நீளத்திற்கு புதிதாக தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
கண்ணாகணிப்பு அலுவலர் ஆய்வு
இந்தப் பணிகளை திருப்பத்துர் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரியும், அரசு கூடுதல் தலைமை செயலாளருமான தென்காசி ஜவகர் நேரில் ஆய்வு செய்தார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன், கோட்ட பொறியாளர் இ.முரளி உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் கூடுதல் அரசு தலைமைச் செயலாளர் ஜவகர் கூறுகையில் இச்சாலையால் மலைவாழ்மக்கள் சிறந்த போக்குவரத்து வசதியை பெற்றுள்ளனர். இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்சில் செல்லவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை திருப்பத்தூர், சேலம் கொண்டு செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்.