சென்னை,
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
இதன்படி வரும் 25-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை இரண்டு மணி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை அட்டை அணிந்து ஒரு வாரம் போராட்டம் நடத்திய நிலையில் இந்த புதிய முடிவு எடுத்துள்ளனர்.