தமிழக செய்திகள்

ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் வரும் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நடைபெற உள்ளது. இந்த விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் வரும் 28, 29 மற்றும் ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் மாவட்டம் முழுவதும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார். மேலும், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...