தமிழக செய்திகள்

டாஸ்மாக்கை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்

தமிழக முதல்-அமைச்சர் கள்ளுக்கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.

தினத்தந்தி

இந்து மக்கள் கட்சி சார்பில், ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழக தென்னை, பனை விவசாயிகள் கள்ளுக்கடையை திறக்கவும், கள் இறக்க அனுமதியும் கொடுக்க வேண்டும்.

இல்லையென்றால் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழக கள் இயக்கம் சார்பில் வருகிற ஜனவரி மாதம் 21-ந்தேதி தடையை மீறி கள் இறக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளுக்கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை