தமிழக செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்-மேலாளிடம், தொழிற்சங்கத்தினர் மனு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்- மேலாளிடம், தொழிற்சங்கத்தினர் மனு

பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் மேலாளர் மணிமொழியிடம், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மாணிக்கம் நேற்று ஒரு மனு கெடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 2-ந்தேதி டாஸ்மாக் விற்பனையாளர் ஜெகநாதனை ஏழுரை சேர்ந்த சம்பத் என்பவர் பீர் பாட்டிலால் தலையில் தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நான் மதுக்கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்தார். எனவே எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அப்போது அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் உடன் இருந்தனர். 

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு