தமிழக செய்திகள்

‘டாஸ்மாக்’ கடைகள் இன்று செயல்படாது

தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் வசதிக்காக நேற்று மாலை கடைகள் திறக்கப்பட்டன.

தினத்தந்தி

இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வில்லா முழு ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டி பொதுமக்கள் வசதிக்காக இந்த ஏற்பாட்டை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல தங்களின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படலாம் என்றும், வேண்டிய மதுபாட்டில்களை முன்கூட்டியே வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளலாம் என்றும் மதுப்பிரியர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் டாஸ்மாக் கடைகள் 23-ந் தேதி (இன்று) திறக்கப்படாது என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார்.

கடந்த 10-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை