தமிழக செய்திகள்

இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் இயங்காது - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தாக்கம் காரணமாக கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் பால், மருந்து பொருட்கள், குடிநீர், பத்திரிக்கை உள்ளிட்டவற்றின் விநியோகத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரை மற்றும் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் இயங்கும் என தமிழக அரச தெரிவித்துள்ள சூழலில், டாஸ்மாக் மதுக்கடைகள் எதுவும் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு