தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7,000 கோடி முதலீடு

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை தொடங்கி 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.இதில் முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடுகளை விஞ்சும் வகையில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட உள்ளன.

இந்த நிலையில் டாடா நிறுவனம் தமிழகத்தில் கூடுதலாக ரூ.7,000 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது. ஓசூரில் உள்ள ஐபோன் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் அடுத்து வரும் ஆண்டுகளில் சுமார் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த முதலீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு