தமிழக செய்திகள்

ஆவடியில் கியாஸ் கசிவால் டீ கடையில் தீ விபத்து

ஆவடியில் கியாஸ் கசிவால் டீ கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

தினத்தந்தி

ஆவடி கன்னிகாபுரம் பெரியார் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 54). இவருடைய தாயார் பார்வதி (75). இருவரும் ஆவடி பஜாரில் டீ கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை திடீரென இவர்களது கடையில் கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. பாபு மற்றும் அவரது தாயார் பார்வதி இருவருக்கும் கையில் தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் ஆவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் கடையில் இருந்த சிலிண்டர் மற்றும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்து ஏற்பட்டதும் கடையில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடிவிட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து