தமிழக செய்திகள்

ஆசிரியர்- மனைவியை கத்தியை காட்டி மிரட்டி நகை, செல்போன் வழிப்பறி

ஆசிரியர்- மனைவியை கத்தியை காட்டி மிரட்டி நகை, செல்போன் வழிப்பறி

தினத்தந்தி

ஜமுனாமரத்தூர் தாலுகா அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 30), ஆசிரியர்.

இவர் நேற்று தனது மனைவியுடன் திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். பின்னர் ராஜசேகரின் மொபட்டில் மனைவி மற்றும் உறவினர் சூரத்குமார் என மூன்று பேரும் சென்றுள்ளனர்.

மொபட்டை சூரத்குமார் ஓட்டினார்.

போளூரில் இருந்து ஜமுனாமரத்தூர் சாலையில் மலையடிவாரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் அருகே சென்றபோது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென அவர்களை வழிமறித்தனர்.

பின்னர் அந்த நபர்கள் ராஜசேகரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரும், அவரது மனைவியும் அணிந்திருந்த மோதிரம், செயின் உள்ளிட்ட சுமார் 1 பவுன் நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து ராஜசேகரன் கொடுத்த புகாரின் பேரில் ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்