தமிழக செய்திகள்

மோகனூர் வட்டார வள மையத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

மோகனூர்:

மோகனூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட 4, 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான முதல் பருவத்திற்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி மோகனூர் வட்டார வள மையத்தில் 3 நாட்கள் நடந்தது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் செயல்பாடுகளுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டது,

இந்த பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவி பேராசிரியர் பழனிவேல்ராஜ், வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் இளங்கோ, பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். இதனை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணன், மாவட்ட திட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் குமார் ஆகியோர் பார்வையிட்டனர். மோகனூர் பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...