தமிழக செய்திகள்

ஆசிரியர்கள் சொத்து கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

ஆசிரியர்கள் சொத்து கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973, விதி 7 (3)-ன்படி, அரசு பணியாளர் ஒவ்வொருவரும் தங்களுடைய சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை உரிய காலத்தில் சமர்ப்பித்தலை அனைத்து துறை செயலாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசின் இந்த கடிதத்தை இணைத்து அனுப்பி இருக்கிறார்.

அதன்படி, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் தங்களுடைய சொத்து மற்றும் கடன் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது