தமிழக செய்திகள்

தியாகதுருகத்தில்ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தியாகதுருகத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா.

தியாகதுருகம், 

தியாகதுருகத்தில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டமானது, தமிழக அரசு எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் பணிகளை, ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யும் கல்வித்துறையின் நடவடிக்கையை கண்டித்தும், பயிற்ச்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும், அதிகாரிகளே ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் ராஜி நன்றி கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...