தமிழக செய்திகள்

பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை

பாலகால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது

திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள பாலகால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. திருமெய்ஞானபுரீஸ்வரருக்கும், பாகம்பிரியாள் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோ பூஜை, கஜ பூஜை, பூர்ணாகுதி நடந்தது.

தொடர்ந்து பைரவருக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீர், இளநீர் மற்றும் யாகவேள்விகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீராலும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ராணி மதுராந்தக நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் செய்திருந்தனர். 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...