தமிழக செய்திகள்

நெல்லையில் வந்தே பாரத் ரெயிலில் பழுது: 40 நிமிடங்கள் தாமதம் ஆனதால் பயணிகள் அவதி

ரெயிலின் 'சி-17' பெட்டியில் பிரேக் பிடித்துக் கொண்டு விடுப டாமல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அதை தற்காலிகமாக சரி செய்தனர்

சென்னை,

சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில், நேற்று அதிகாலை 5 மணிக்கு வழக்கம்போல் சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 12.32 மணிக்கு நெல்லை சந்திப்புக்கு வந்தது. பின்னர் 12.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் நோக்கி சென்றது.சிறிது தூரத்தில் நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரெயில் சென்றபோது திடீரென்று பிரேக்கில் பழுது ஏற்பட்டது.

இதனால் அங்கு ரெயில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்ததும் நெல்லை சந்திப்பில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று ரெயிலில் ஆய்வு செய் தனர். அப்போது ரெயிலின் 'சி-17' பெட்டியில் பிரேக் பிடித்துக் கொண்டு விடுப டாமல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அதை தற்காலிகமாக சரி செய்தனர்.

Also read:'வந்தே பாரத்' மீது கல் வீசியவர்கள் அதிநவீன கேமரா, ஏ.ஐ. உதவியுடன் கண்டறியப்பட்டனர் - அஸ்வினி வைஷ்ணவ்

பின்னர் ரெயில் சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு நாகர்கோவில் நோக்கி சென்றது. மீண்டும் பிரேக் பழுது ஏற்படாமல் இருக்க ரெயில்வே ஊழியர்களும் அதே ரெயிலில் சென்றனர். இதனால் நாகர்கோவிலுக்கு ரெயில் தாமதமாக சென்றடைந்தது. ரெயில் தாமதம் ஆனாதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.