தமிழக செய்திகள்

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரக்கோணம் கிருஷ்ணாம்பேட்டை, ஹபில்ஸ்பேட்டை, விண்டர் பேட்டை ஆகிய பகுதிகளில் அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது விண்டர்பேட்டை பகுதியில் புதர் மறைவில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த குருபிரசாத் (வயது 28) என்பதும் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT