தமிழக செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வந்தவாசி

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வந்தவாசியை அடுத்த காரணை கிராமம் ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் லோகநாதனுக்கும் (வயது 35), திலகம் (31) என்ற பண்ணுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஷாலினி (3) என்ற மகள் உள்ளாள். லோகநாதன் சில ஆண்டுகளுக்கு முன்பு மருந்து கடை நடத்தி வந்துள்ளார். பின்னர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்த லோகநாதன், நோய் குணமாக மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இவர் மருந்து எடுத்துக் கொள்ளவில்லையாம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லோகநாதன் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதுகுறித்து இவரது மனைவி திலகம் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்