தமிழக செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

மூன்றடைப்பு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

நாங்குநேரி:

மூன்றடைப்பு அருகே உள்ள அ.சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 22). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. முருகனின் பெற்றோர் ஆந்திராவில் உள்ளனர். நேற்று முன்தினம் முருகனிடம் அவரது பெற்றோர், போதைப்பொருள் பயன்படுத்தக்கூடாது என்று பேசியுள்ளனர். இதனால் வெறுப்படைந்த முருகன் வீட்டில் இருந்த சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை அக்கம்பக்கத்தினர் இதுபற்றி மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது