தமிழக செய்திகள்

துரைப்பாக்கத்தில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குத்திக்கொலை

துரைப்பாக்கத்தில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த நீலாங்கரை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 20). இவர் துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் வெங்கடேஸ்வரா அவென்யூவில் ஒரு கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், முருகன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இப்பகுதியில் மதுஅருந்தும் போது ஏற்பட்ட தகராறில் உடன் வந்தவர்கள் முருகனை குத்திக்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலை செய்து விட்டு தப்பி ஒடிய மர்ம ஆசாமிகள் யார்? என தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை