தமிழக செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே லாரியை பின்னோக்கி இயக்கும் போது கம்பிகள் குத்தி வாலிபர் பலி

கும்மிடிப்பூண்டி அருகே லாரியை பின்னோக்கி இயக்கும் போது அதிலிருந்த இரும்பு கம்பிகள் குத்தி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

இரும்பு கம்பிகள் குத்தி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கங்கா (வயது 21). இவர் சென்னை செங்குன்றத்தில் தங்கி இரும்பு கம்பி விற்பனை செய்யும் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காடு பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு லாரியில் இருந்து கம்பிகளை இறக்க வந்தார். குடோனில் இரும்பு கம்பிகளை இறக்க லாரியை டிரைவர் பின்னோக்கி இயக்கினார். அதை கவனிக்காமல் பின்னால் நின்று கொண்டு இருந்த கங்கா மீது லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் குத்தியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சோகம்

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார். லாரியை பின்னோக்கி இயக்கும்போது இரும்பு கம்பி குத்தி லாரிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுதியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து