தமிழக செய்திகள்

வாகனம் மோதி வாலிபர் பலி

தினத்தந்தி

கந்தம்பாளையம்

திருச்செங்கோடு ஆனங்கூர் வெட்டுக்காட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சசிகுமார் (வயது 23). இவர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சவுந்தர்யா (21). இந்தநிலையில் மோகனூரில் உள்ள சவுந்தர்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவரைப் பார்க்க வேண்டி சசிகுமார் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு வசந்தபுரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் பிரிவு ரோடு என்ற இடத்தில் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு கிடந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சசிகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தவிபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்