தமிழக செய்திகள்

வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது

வாலிபரை கத்தியால் குத்திய 3 பேரை கைது செய்தனர்.

தினத்தந்தி

தொண்டி, 

திருவாடானை தாலுகா கிடங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர் கடந்த ஆண்டு ஆண்டாவூரணி கிராமத்தைச் சேர்ந்த கவுதமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். கணவன், மனைவி இருவரும் கேவையில் வசித்து வந்தநிலையில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கவுதமி கோபித்து கொண்டு ஊருக்கு வந்துவிட்டாராம். ராஜலிங்கம் கிடங்கூர் கிராமத்தில் தாயாருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ராஜலிங்கம், கவுதமியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அவரது தந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதற்கிடையே கவுதமியின் அண்ணன் காளிமுத்து மற்றும் சிலர் சென்று ராஜலிங்கத்திடம் தகராறு செய்தனர். மலும் காளிமுத்து, மாரியப்பன் ஆகியோர் கத்தியால் ராஜலிங்கத்தை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் தப்பி சென்று விட்டனர். படுகாயம் அடைந்த ராஜலிங்கம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீசார், காளிமுத்து, மாரியப்பன்(20), பிரதீப்(24), திருப்பாகோட்டை அஜித்(27), சுரேஷ்(24) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பிரதீப், அஜித், சுரேஷ் ஆகியேரை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு