தமிழக செய்திகள்

பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீதான அடுத்தகட்ட விசாரணைக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சி.பி.சி.ஐ.டி. கடிதம்

அடுத்தகட்ட விசாரணைக்கு தமிழக அரசு மற்றும் யு.பி.எஸ்.சி.யிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக சி.பி.சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். மற்றும் நெல்லை சார் ஆட்சியர் ஆகியோர் நடத்திய விசாரணையின் அறிக்கைகளை வழங்க வேண்டும் என அருண்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி சங்கர் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் சி.சி.டி.வி. காட்சி ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே போல் இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையும், விசாரணை அதிகாரி அமுதாவின் அறிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ள சூழலில், அடுத்தகட்ட விசாரணைக்காக தமிழக அரசு மற்றும் யு.பி.எஸ்.சி.யிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்ட பல்வீர் சிங் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் இந்த முறை பின்பற்றப்படும் என்றும் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு