தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்-மந்திரி சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இன்று நேரில் சந்தித்தார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகம் வந்துள்ள தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், தனது குடும்பத்தினருடன் நேற்று திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில் சென்னை, ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்தார். இதற்கு முன்பு கடந்த 2019-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்திருந்தார். தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இதற்கு முன்பு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் மற்றும் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியையும் சந்தித்து பேசியிருந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான இன்றைய சந்திப்பின்போது தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மாநில அரசுகள் ஒன்றிணைவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது