தமிழக செய்திகள்

கோவில் உண்டியலைஉடைத்து பணம் திருட்டு

கோவில்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி செல்லப்பாண்டியன் நகரிலுள்ள காந்தாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு பூட்டிவிட்டு பூசாரி சென்றுள்ளார். அன்று நள்ளிரவில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.