பல்லடம்
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் அரசு நடுநிலைப்பள்ளி எதிரே சுமார் 500 ஆண்டுகள் பழமையான பிருந்தாவன அனுமந்தராயர் கோவில் உள்ளது. இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக கோவிலை முறையாக பராமரிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அதன் அருகே மாதப்பூர் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் கட்டிடப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக அந்த இடத்தை சுத்தம் செய்த போது, கோவில் சேதமடைந்திருப்பதைக்கண்ட பணியாளர்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து கோவிலை சுற்றி சுத்தம் செய்யச் சொன்ன அவர் இது குறித்து பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அந்த கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கோவிலின் உள்ளே சுமார் 3 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை உள்ளது. அருகே, ராமர்,நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களுடன் கல்வெட்டு உள்ளது. இதனால் தொல்லியல் துறைக்கு தகவல் அளித்து அவர்கள் அனுமதி பெற்று புனரமைப்பு செய்யவதாகவும், இந்தக் கோவிலுக்கு சுமார் 20 ஏக்கர் நிலம் மாதப்பூர் பகுதியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.