தமிழக செய்திகள்

கோவில் திருவிழா - ராட்டினத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு...!

தேனி அருகே கோவில் திருவிழாவின் போது ராட்டினத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்து உள்ளார்.

தேனி,

தேனி மாவட்டம் வீரபாண்டியில்கௌமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகின்றது. இதனால் ராட்டினம் அமைப்பதற்காக உப்பார்பட்டியை சேர்ந்த முத்துகுமார் என்ற வாலிபர் இரும்பினால் ஆனா தூண் ஒன்றை தூக்கிச் சென்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இருப்பு தூண் மின்சார கம்பியில் உரசியது.

இதில் உடலில் மின்சாரம் பாய்ந்த முத்துகுமார் மருத்துவமனைக்கு கொண்டு செயல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் திருவிழாவின் போது ராட்டினத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை