தமிழக செய்திகள்

வீரபத்திர சாமி கோவில் திருவிழா

சுங்கரஅள்ளியில் வீரபத்திர சாமி கோவில் திருவிழாவில் தலை மீது தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள சுங்கரஅள்ளி கிராமத்தில் குருமன்ஸ் இன மக்களின் குல தெய்வமான வீரபத்திர சாமி கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. பின்னர் பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.