பணகுடி:
காவல்கிணறு புண்ணியவாளன்புரம் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சப்பர பவனியை தொடர்ந்து தக்கலை மறைமாவட்ட பிஷப் ஜார்ஜ் ராஜேந்திரன் கொடியேற்றினார். ஒவ்வொரு திருநாளிலும் பகல் 10.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு சப்பர பவனி, மறையுரை தொடர்ந்து திருப்பலியும் நடக்கிறது. 9-ம் திருவிழா அன்று மாலை நற்கருணை பவனியும் அதன்பின் திருப்பலியும் நடக்கிறது. 10-ம் திருவிழா (செப்டம்பர்-8-ந்தேதி) அன்று மாலை சப்பர பவனி, மறையுரை அதன் பின் தூத்துக்குடி முன்னாள் பிஷப் இவான் அம்புரோஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது. அதன்பின் பொது அசனம் நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை காவல்கிணறு பங்கு குரு ஆரோக்கியராஜ், உதவி பங்கு குரு வினோத் மற்றும் பங்கு மேய்ப்பு பணிகுழுவினர் செய்து வருகிறார்கள்.