தமிழக செய்திகள்

கோவில் வருசாபிஷேகம்

செங்கோட்டை குலசேகரநாத கோவில் வருசாபிஷேகம் நடந்தது.

செங்கோட்டை:

செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாத சுவாமி கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம், அஸ்திர ஹோமம், திரவியாகுதி, மகா பூர்ணாகுதி உள்ளிட்ட ஹோமங்களுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 10.05 முதல் 10.25 மணியளவில் விமானம் மற்றும் மூலஸ்தானத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT