தமிழக செய்திகள்

14 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து

14 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துக்களை தவிர்ப்பதற்காக ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டு விதிமீறல்கள் உள்ள பட்டாசு ஆலைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகாசி தாலுகாவில் 3 பட்டாசு ஆலைகளிலும், வெம்பக்கோட்டை தாலுகாவில் 8 பட்டாசு ஆலைகளிலும், சாத்தூர் பகுதியில் 1 பட்டாசு ஆலையிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 2 பட்டாசு ஆலைகளிலும் ஆக மொத்தம் 14 பட்டாசு ஆலைகளில் விதிமீறல் கண்டறியப்பட்டதால் அந்த பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் ஆய்வின் போது உள்குத்தகை விடப்பட்டது கண்டறியப்பட்டால் உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மேகநாத ரெட்டி எச்சரித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது