தமிழக செய்திகள்

மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்படும் தகுதி சான்றிதழ் தற்காலிக நிறுத்தம் - தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்படும் தகுதி சான்றிதழ், தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தகுதிச் சான்றிதழுக்கான கட்டணங்களை ஒருமைப்படுத்துதல், மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறைகளை எளிமைப்படுத்துவதற்கான தெழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கான சீராய்வுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதால், தகுதிச் சான்றிதழுக்கான தெழில்நுட்ப நுழைவுகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

தகுதிச் சான்றிதழ் தேவைப்படும் மாணவர்கள், சில நாட்கள் பெறுத்திருந்து பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கெள்ளப்படுகின்றனர். இதுதற்காலிகமானதே. செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு பின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். யாரும் பதற்றப்பட வேண்டாம். அனைவரது விண்ணப்பமும் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்