தமிழக செய்திகள்

பரமத்திவேலூர் சந்தையில் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்

பரமத்திவேலூர் சந்தையில் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்

தினத்தந்தி

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 979 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.25.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ.21.10-க்கும், சராசரியாக ரூ.23-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 870-க்கு ஏலம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 753 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.39-க்கும், குறைந்தபட்சமாக ரூ.21-க்கும், சராசரியாக ரூ.23-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 299-க்கு ஏலம் நடந்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது