தமிழக செய்திகள்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார் குறித்து விசாரணை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகள் இன்று சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கணக்கு தணிக்கை அறிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதால் டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்தது. விசாரணைக்குப்பின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு