தமிழக செய்திகள்

சேத்துப்பட்டை கலக்கிய பயங்கர ரவுடிகள் கைது

சேத்துப்பட்டை கலக்கிய பயங்கர ரவுடிகள் கைது கொலை திட்டத்துடன் காரில் சுற்றிய போது பிடிபட்டனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சகாயம் என்ற தேவ சகாயம் (வயது 38). பயங்கர ரவுடியான இவர் மீது 5 கொலை வழக்குகள் உள்பட 30 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் தனது கூட்டாளிகளான பாம்பு வினோத், ஆகாஷ்குமார், ரஜேஷ் கண்ணன், தினகரன், பாம்பு பிரகாஷ், பிரபாகரன் ஆகிய 6 பேருடன் நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றிக் கொண்டிருந்தார்.

சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை 11-வது அவென்யூவில் உள்ள ஒரு டீக்கடையில் இவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று ரவுடி தேவ சகாயத்தையும், கூட்டாளிகள் 6 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவர்கள் சுற்றிய கார் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்து பட்டாக்கத்திகள் கைப்பற்றப்பட்டது. ரவுடி தேவ சகாயம் தனது எதிரி ஒருவரை தீர்த்துக்கட்ட பயங்கர கொலை திட்டத்தோடு சேத்துப்பட்டு பகுதிக்கு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. தக்க நேரத்தில் போலீசார் எடுத்த இந்த நடவடிக்கையால் ஒரு கொலை குற்றம் தடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்