தமிழக செய்திகள்

மதுரையில் பயங்கரம்: வாலிபர் படுகொலை; தந்தைக்கும் வெட்டு - வீடு புகுந்து டிரைவர் வெறிச்செயல்

மதுரையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த அவருடைய தந்தைக்கும் வெட்டு விழுந்தது. வீடு புகுந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மதுரையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த அவருடைய தந்தைக்கும் வெட்டு விழுந்தது. வீடு புகுந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட டிரைவர் கைது செய்யப்பட்டார்.

முன்விரோதத்தில் தகராறு

மதுரை மாடக்குளம் தனத்துவம்புதூர் பகுதியை சேர்ந்தவர் அய்யனண். இவருடைய மகன் ஜெயக்குமார் (வயது 20), கூலி தொழிலாளி.

இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சோனைராஜ் (40), கார் டிரைவர். இவர்களுக்குள் முன்விரோதம் இருந்ததால், அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று ஜெயக்குமார் மது போதையில் சோனைராஜ் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர் தனது வீட்டுக்கு வந்துவிட்டார்.

ஆத்திரத்தில் இருந்த சோனைராஜ் அரிவாளை எடுத்து வந்து ஜெயக்குமாரை வீடு புகுந்து வெட்டினார். தடுக்க வந்த ஜெயக்குமாரின் தந்தை அய்யனணுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் ரத்த வெள்ளத்தில் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அய்யனணை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலை தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து சோனைராஜை கைது செய்து விசாரித்தனர்.

காரணம் என்ன?

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, ஜெயக்குமாரின் தாயாருக்கும் சோனைராஜூக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இந்த விவகாரத்தால் ஏற்பட்ட தகராறில்தான் ஜெயக்குமார் கொல்லப்பட்டார், என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து