தியாகதுருகம்,
தியாகதுருகம் வட்டார கல்வி அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவ பாடப்புத்தகஙகளை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 69 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், 15 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், 2 உண்டு உறைவிடப்பள்ளிகள் ஆக மொத்தம் 86 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, நகர செயலாளர் மலையரசன், ஒன்றியக்குழு உறுப்பினர் தேவி பழனிவேல், அலுவலக கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி, தலைமை ஆசிரியர்கள் மணிமொழி, சுசீலா அம்பிகாபதி, பொன்னுசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.