தமிழக செய்திகள்

கடன் தொகையை திருப்பி செலுத்தக்கூறி குறுஞ்செய்தி

கடன் தொகையை திருப்பி செலுத்தக்கூறி குறுஞ்செய்தி

தினத்தந்தி

நாகை மாவட்டம் திருக்குவளை, தெற்கு பனையூர், கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் கலெக்டர் அருண்தம்புராஜிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தனியார் தொண்டு நிறுவனத்திடம் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் மகளிர் சுய உதவி குழு மூலம் கடன் பெற்றோம். இதற்கான தவணையை 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்குள் செலுத்தி முடித்து விட்டோம். அதற்கான ரசீதும் உள்ளது. இந்த நிலையில் கடந்த 7 மாதங்களாக எங்களின் செல்போன் எண்களுக்கு, தனியார் தொண்டு நிறுவனத்தில் இருந்து அபராத தொகையுடன் கடனை திருப்பி செலுத்தும்படி குறுஞ்செய்தி வருகிறது. இதன் காரணமாக எங்களுடைய ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தி வேறு எந்தவிதமான நலத்திட்ட உதவிகளையும் பெற முடியவில்லை. கல்வி கடன், தொழில் கடன் வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவும், ஆதார் அட்டை மூலமாக வேறு நலத்திட்ட உதவிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து