சென்னை,
முன்னாள் எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தா.பாண்டியன், திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தார்.