தமிழக செய்திகள்

தக்கோலம் பேரூராட்சி கூட்டம்

தக்கோலம் பேரூராட்சி கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

அரக்கோணம்

தக்கோலம் பேரூராட்சி கூட்டம் நடந்தது.

தக்கோலம் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தக்கோலம் கிரிராஜ கன்னிகாம்பாள் கோவில் பிரம்மோற்சவம் நடைபெறும் காலங்களில் மாட வீதிகளில் உள்ள இறைச்சி கடைகளை மூடி வைத்தல், பெயரிடப்படாத தெருக்களுக்கு பெயர் வைப்பது, உயர் கோபுர மின் விளக்குக்கான ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது, வளர்ச்சித் திட்ட பணிகள், பேரூராட்சியில் சந்தை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கோமளா ஜெயகாந்தன், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி மன்ற எழுத்தர் சொக்கலிங்கம் நன்றி கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு