தமிழக செய்திகள்

புயலை விட வேகமாக செயல் பட்ட தமிழக அரசு - அமைச்சர் தங்கமணி

நிவர் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கூறியதாவது:-

நிவர் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது. நிவர்' புயலால் மின்துறையில் ஏற்பட்ட சேத மதிப்பு இதுவரை ரூபாய் 15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. 'நிவர்' புயலால் 2,488 மின்கம்பங்கள் சேதம். மின்னல் தாக்கி 108 மின்மாற்றிகள் பாதிப்படைந்துள்ளது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் முழுமையாக மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது. இனிவரும் காலங்களில் புயல், மழையால் பாதிக்காத வகையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கப்படும்.சென்னையில் 95% மின் விநியோகம் கொடுக்கப்பட்டுள்ளது, இன்று இரவுக்குள் முழுமையாக மின் விநியோகம் செய்யப்படும் என கூறினார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்