தமிழக செய்திகள்

வெளிப்படையாகப் பாராட்டிய இந்திரா பார்த்தசாரதியின் பெருந்தன்மைக்கு நன்றி - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக பட்ஜெட் குறித்து பாராட்டு தெரிவித்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக பட்ஜெட் குறித்து எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, 'நான் 1952 முதல் வாக்களித்து வருகிறேன். நான் பார்த்த மிகச் சிறந்த மாநில பட்ஜெட் இதுவாகும். அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி, நுணுக்கமான மற்றும் பரந்த அடிப்படையிலான, மக்கள் சார்ந்த பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஒன்றிய நபர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறது.' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த பாராட்டு தமிழ்நாடு அரசுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக அமைந்துள்ளது என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'தமிழின் தனிப்பெரும் படைப்பாளியாக விளங்கும் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்களின் இந்தப் பாராட்டைப் பெரிதும் மதிக்கிறேன். தமிழ்நாடு அரசுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இப்பாராட்டு அமைந்துள்ளது. வெளிப்படையாகப் பாராட்டிய அவரது பெருந்தன்மைக்கு நன்றி!' என்று கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்