தமிழக செய்திகள்

மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய மந்திரி நிதின் கட்காரி, பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுல பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!

பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே… தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து