தமிழக செய்திகள்

காலை உணவு திட்டத்தை செயல்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றி

அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்பத்திய முதல்-அமைச்சருக்கு நன்றி தொவித்து ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினத்தந்தி

ரிஷிவந்தியம்

வாணாபுரம் பகண்டைகூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்றக்கூடத்தில் ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், சவுரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு வரவேற்றார். உதவியாளர் பிரபாகரன் தீர்மானங்களை வாசித்தார்.

இதில் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் மற்றும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல் உள்பட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் அமிர்தம் ராஜேந்திரன் கோவிந்தராஜி, ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள், பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்