தமிழக செய்திகள்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வருவாய் துறை சார்பில் வட்டாட்சியர் செந்தூர் ராஜ் நியமனம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வருவாய் துறை சார்பில் வட்டாட்சியர் செந்தூர் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி,

சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க வந்த மாஜிஸ்திரேட்டுக்கு காவல்துறை ஒத்துழைப்பு அளிக்காததால் சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. மேலும், மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு இடையூறாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோர்ட் உத்தரவிட்டது.

ஐகோர்ட்டு கிளை உத்தரவையடுத்து சாத்தான்குளம் காவல் நிலையம் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பாளராக சமூக நலத்துறை வட்டாட்சியர் செந்தூர் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள் சேகரிக்கும் பணியில் வட்டாட்சியர் செந்தூர் ராஜ் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...