தமிழக செய்திகள்

'துணிவு' படத்தின் 2-வது பாடல் இன்று வெளியாகிறது...!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகிறது.

தினத்தந்தி

சென்னை,

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடல் வெளியானது. ஜிப்ரான் இசையில் அனிரூத் பாடியிருந்த இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் துணிவு படத்தின் 2-வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'காசேதான் கடவுளடா' என்ற பாடல் இன்று மதியம் 2 மணியளவில் வெளியாக உள்ளது.

இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது