சென்னை,
தமிழகத்தில் 11.7 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் கொரோனா 3-வது அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 11.7 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்த அளவு தடுப்பூசி போடப்பட்டதால் தான் கொரோனா 3-வது அலையை சமாளிக்க முடிந்தது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் கொரோனா தொற்று தானாக ஏறுவதாகவும் தானாக இறங்குவதாகவும் நினைக்கிறார்கள்.
ஆனால் வாய்ப்பு கொடுத்தால் நுண்கிருமி பரவும் இல்லையென்றால் பரவாது. தொடர்ந்து கொரோனாவை சமாளிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. மக்கள் பதட்டமடைய வேண்டியதில்லை என்று கூறினார்.