6-ம் ஆண்டு நினைவு தினம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் தலைவர்கள் அஞ்சலி
‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 6-ம் ஆண்டு நினைவுத்தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை,
பத்திரிகை உலகில் வியத்தகு சாதனை படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.