தமிழக செய்திகள்

திமுக கூட்டணியில் காங்கிரஸ்-க்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து, 2 நாளில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் - கே.எஸ்,அழகிரி

திமுக கூட்டணியில் காங்கிரஸ்-க்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து, 2 நாளில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்,அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ. ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கே.எஸ்,அழகிரி கூறியதாவது:-

"கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் இரு கட்சிகள் இடையே பெருமளவுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது".

"தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றி அடைந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ்-க்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து, 2 நாளில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். எங்களுக்குத் தேவையான எண்ணிக்கையைக் கேட்டுள்ளோம்.

இவ்வாறூ அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...